நைரோபி: 
ளையோர் உலக தடகளம் போட்டியில்இந்திய வீரர் அமித் காத்ரி  வெள்ளிப் பதக்கம் வென்றார்.
கென்யா தலைநகர் நைரோபியில் இளையோர் உலக தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது.
ஆண்களுக்கான 10,000 மீட்டர் ரேஸ் வாக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் இந்திய வீரர் அமித் காத்ரி  வெள்ளிப் பதக்கம் வென்று, உலக அளவில் இந்தியாவின் இரண்டாவது பதக்கத்தை வென்றார். 17 வயதான காத்ரி, தேசிய சாதனை படைத்தவர்.
நைரோபி கடலிலிருந்து சுமார் 1800 மீ உயரத்தில் உள்ளது. இதனால், அங்கு நிலவும் தட்பவெப்பநிலையால்  காத்ரி செயல்திறனைப் பாதிக்கப்பட்டது. அவர் பந்தயத்தின் போது மூச்சுவிடச் சிரமப்பட்டார்.
தான் பதக்கம் வென்று குறித்துப் பேசிய இந்திய வீரர் அமித் காத்ரி, இது நான் எதிர்பார்த்த முடிவு அல்ல, ஆனாலும் வெள்ளிப் பதக்கம் வென்றதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த போட்டியில் பங்கேற்பதற்காக ஐந்து நாட்களுக்கு முன்பு கென்யா வந்திருந்த போதும், இங்குள்ள சூழ்நிலையால் எனக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது என்றார்.