டில்லி
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நாடெங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது
குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி பாகிஸ்தான், பங்ளாதேஷ், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோர் இந்தியாவில் குடியேறலாம். இதில் கிறிஸ்தவர்கள் மற்றும் புத்த மதத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவில் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம்.
இதனால் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை கிடைக்காது என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பல இஸ்லாமிய அமைப்புக்களும், பல்வேறு எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களும் இந்த சட்டத் திருத்தம் அமலாக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன
இந்நிலையில் நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச்சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது எதிர்ப்பை மீறி மத்திய உள்துறை அமைச்சகம். இந்த சட்டத்தை அமலாக்கி உள்ளது.