சென்னை: சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு முதன்முறையாக முக அங்கீகார வருகை பதிவேடு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மாநகராட்சி பணியாளர்கள் வருகை முறைகேடு தொடர்பாக புகார் எழுந்த நிலையில், புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை, மாநகராட்சி அலுவலகங்களில் சரியான வருகை பதிவேட்டை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பலர் முறையாக தங்களது வருகையை பதிவு செய்வதில்லை என்றும், முறைகேடாகவும், தாமதமாகவும் பணிக்கு வருவதாகவும் குற்றம் சாட்டப்படடது.
இதையடுத்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று ஆய்வு செய்த மேயர் பிரியா, அங்கு பணியாளர்களின் வருகை பதிவேடு குறித்து கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகங்களில் இம்மாத இறுதி முதல் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு பின்பற்றப்படுமென தெரிவித்தார்.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில், முதன்முறையாக முக அங்கீகார வருகை பதிவேடு முறையை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது மாநகராட்சி பணியாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.