புதுடெல்லி:

தெற்கு டெல்லியில் ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்துக்கு 810 குடியிருப்புகள் உள்ளன.
இவற்றில் 676 குடியிருப்புகளின் ஏர் இந்தியா ஊழியர்கள் உள்ளனர்.


ஜெட் ஏர்வேஸ் போல் ஏர் இந்தியாவும் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதால், ஏர் இந்தியா குடியிருப்புகளில் இருந்து வெளியேறுமாறு ஊழியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

தேவைப்பட்டால், ஊழியர்களுக்கு மானிய விலையில் குடியிருப்புகளை ஒப்பந்த்த அடிப்படையில் வழங்கவும் ஏர் இந்தியா தயாராக உள்ளது.

தற்போது குடியிருப்பு உள்ள இடம் டெல்லி மாநகராட்சிக்கு சொந்தமானது. எனவே, குடியிருப்புகளில் இருந்து ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கை சில காலம் தொடரும் என்றார் ஏர் இந்தியா நிறுவன செய்தி தொடர்பாளர் ஒருவர்.

ஏர் இந்தியா நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது, ஏர் இந்தியாவுக்கு தினமும் ரூ.6 கோடி இழப்பு ஏற்படுகிறது. குடியிருப்புகளில் இருந்து ஊழியர்களை வெளியேற்றுவது அரசின் முடிவு. இதுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை.

விமான சேவையை பாதியாக குறைக்க பாகிஸ்தான் முடிவு செய்தபிறகு, ஏர் இந்தியாவுக்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.