மதுரை: அமெரிக்க பெண்ணை இந்து முறைப்படி  மணந்த தமிழக மருத்துவர்

Must read

மதுரை:

மிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் இந்து முறைப்படி அமெரிக்க பெண்ணை மணந்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அழகப்பன். இவர் கடந்த 1983-ம் ஆண்டு அமெரிக்க பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவியாளர் பணயில்  சேர்ந்தார். பிறகு குடும்பத்துடன் அங்கு குடியேறினார்.

இவரது இரண்டாவது மகன் சிவக்குமார்(வயது 29). இவர் அங்கு மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே வீட்டின் அருகே வசித்து வந்த ஸ்டீவன் பவல் மகள் எலிசபெத் ஆன்( வயது 29) என்பவரை காதலித்து வந்தார்.

இவர்களது காதலை இரு வீட்டினரும் ஏற்று திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

இந்து முறைப்படி திருமணம் செய்ய மணமகளின் பெற்றோர் விரும்பினர். இதையடுத்து  மதுரையில் இந்து முறைப்படி திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்தன.

அதன்படி நேற்று காலை அழகர்கோவில் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் இந்து முறைப்படி சிவக்குமார்-எலிசபெத் ஆன் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.

இதில் மணமகள் எலிசபெத் ஆன் ஸ்டீவன் பவல் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என  12 பேர் அமெரிக்காவில் இருந்து மதுரை வந்து திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இவர்கள் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி-சேலை அணிந்து மணவிழாவில் கலந்துகொண்டனர்.

More articles

Latest article