தொழில்நுட்ப உலகமே இன்று பதற்றத்தில் உள்ளதுபோன்ற சூழ்நிலைதான் இந்த நிமிடத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

ஆம் அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர் இன்றைய நிலைமைக்கு உச்சநிலைக்கு வந்துள்ளது. அமெரிக்க சீன வர்த்தகப்போரில் மிக முக்கியமான சிக்கல்கள் தற்போது இரண்டு

1. கடந்த டிசம்பர் 2018-ம் ஹூவாவேய் நிறுவனத்தின்  நிறுவன முதன்மை நிதி அதிகாரி மெங் வாங்சூ (Meng Wanzhou) கனடாவில் வைத்து கைது செய்யபப்ட்டார். அதற்கான காரணங்கள்

அ) டி மொபைல் நிறுவனம் தன் ஸ்மார்ட் போன்களை சோதனை செய்யப் பயன்படுத்தும் சில  ரோபாட்டிக்ஸ் இயந்திரங்கள் உட்பட பல்வேறு வர்த்தக ரகசியங்களை  ஹூவாவேய்  நிறுவனம்   திருடியது

ஆ) ஹூவாவேய்  நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்கைகாம் ஹாங்காங்கில் இருந்து  இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கை காமும், ஹூவாவேய் வெவ்வேறு நிறுவனம் என அமெரிக்க  வங்கிகளிடம் பொய் சொல்லி இருப்பதாகவும் ஈரானுக்கு இந்த  ஸ்கைகாம் மூலம் பல சாதனங்கள் மற்றும் கருவிகளை ஹிவாய் நிறுவனம் விற்று இருக்கிறதாவும் அமெரிக்க  நீதித்துறை புகார் தெரிவித்துள்ளது

2.தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் தொலைத்தொடர்பு கருவிகளை அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில், தேசிய நெருக்கடி நிலையை அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார்.

அ) சிறப்பு அனுமதி பெறாமல் அமெரிக்க தொழில்நுட்பங்களை கொடுக்கக்கூடாது

ஆ) அமெரிக்க தொலைத்தொடர்பு நெட்ஒர்க்குகளில் ஹூவாவேய்  மற்றும் தடை செய்யப்பட்ட 70  நிறுவனங்களின்  தயாரிப்புகளை பயன்படுத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது

இதனால் ஹூவாவேய் நிறுவனம்,தன் இயங்குத்தளமான ஆன்டிராய்டை பயன்படுத்தினாலும் பிரத்யோக சேவைகளான ஜிமெயில், யூடியூப், கூகிள் ப்ளே ஸ்டோர் போன்வற்றை பயன்படுத்த  ஆல்பாபெட்(கூகிள்) தடை விதித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இன்டெல் நிறுவனத்தின் பிரதமான பிராசசர்கள் சீனாவுக்கு கொடுக்கப்படாது என்றும் அடுத்த அறிவிப்பு வரும் வரை எந்த தொழில்நுட்ப பிரச்னைக்கும் சேவை  வழங்கப்படாது என்றும்  அந்த நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

அதே சமயம் அமெரிக்கா நிறுவனமா ஆப்பிள் 75 பில்லியன் டாலர்  சரிவை சந்தித்துள்ளது, இந்த வருடத்தின் மிகப்பெரும் சரிவு என அமெரிக்க நிறுவனங்கள் தெரிவித்துள்ளன,.  ஏனெனில்பெரும்பான்மையான ஐபோன் உற்பத்தி சீனாவில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது என்பதுதான்

அதுமட்டுமல்ல உலகில் அதிகப்படியான நெட்வோர்க் கருவிகளுக்கான பெரும் சந்தையை கொண்டுள்ளது  ஹூவாவேய்  நிறுவனம்தான்

நோக்கியா இரண்டாம் இடத்திலும் எரிக்சன் மூன்றாமிடத்திலும் உள்ளது
ஆப்ரிக்கா கூட்டமைப்பு நாடுகளின்  தலைமை செயலகம்  அடிஸ் அபாபா வில் அவர்களுக்கான தலைமை செயலகம் 200 மில்லியன் டாலர் செலவில் சீன நிதியுதவின் கீழ் கட்டப்பட்டது.

அதில் டேட்டா சென்டர்  சீனாவை அமைத்துக்கொடுத்தது. 2018 ல் French செய்தித்தாளான Le Monde Afrique ஒரு அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டது கடந்த 5 வருடங்களாக நள்ளிரவு 2 மணிக்கு ஆப்பிரிக்க கூட்டமைப்பின்  டேட்டா சென்டரில் உள்ள தகவல்களை  ஷாங்காயில் உள்ள டேட்டா சென்டர்களுக்கு தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளது என்று. அப்போது அந்த டேட்டா சென்டருக்கான வன்பொருட்களையும் டேட்டா சென்டரையும் கட்டமைத்தது  ஹூவாவேய்  நிறுவனம்தான். ஆனால் ஹூவாவேய்  இந்த குற்றச்சாட்டை மறுத்தது. சீனாவும் மறுத்தது.

ஆனால்  French செய்தித்தாளான Le Monde Afrique 2017ம் ஆண்டு டேட்டா சென்டர்களில் திடீரென வழக்கத்திற்கா மாறாக  நெட்வோர்க் மிக அதிகமான அளவில் தகவல்களை பரிமாற்றம் செய்ததாகவும், அங்கே உள்ள கணினிகளில் மைக்ரரோபோன்கள் மூலம்  அங்கே நடப்பவற்றை உளவறிந்ததாகவும் தெரிவித்தது. இப்படி பல நாடுகளில்  ஹூவாவேய் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் உண்டு என்பதால் எனவே இவற்றின் குற்றச்சாட்டுகளை மறுப்பதற்கு இல்லை, அதுமட்டுமல்ல,

சீனா செல்போன் நிறுவனங்கள் தகவல் மையங்களை இந்தியாவில்தான் அமைக்கவேண்டுமென  இந்த உச்சநீதிமன்றமே ஆணை பிறப்பித்துள்ளதையும் நாம் மறந்துவிடக்கூடாது. மேற்கண்ட தொழில்நுட்ப ஒட்டுகேட்பு மற்றும் உளவுப்பணிகளை இந்தியாவும் அதிகப்பட்ச எச்சரிக்கையோடு அணுகுவது சிறந்தது

செல்வமுரளி