நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நசாவ் மருத்துவப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அங்கு எடைக் குறைப்பு சிகிச்சை நிபுணராக வெங்கடேஷ் சாஸ்தாகோனார் (வயது 44) பணியாற்றி வந்தார். அமெரிக்கா வாழ் இந்தியரான இவரது துறையில் 51 வயதுடைய பெண் செவிலியர் பணியாற்றி வருகிறார்.

நோயாளி ஒருவருக்கு ஊசியை தாமதமாக செலுத்தியதால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் செவிலியர் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றுள்ளார். இது குறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வெங்கடேஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதன் பின்னர் 3,500 டாலர் செலுத்தி அவர் சொந்தப் ஜாமீனில் வெளியே வந்தார். நசாவ் மருத்துவப் பல்கலைக்கழகம் அவரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.