$ 100 மில்லியனுக்கும் மேல் மதிப்புள்ள 200 க்கும் மேற்பட்ட தொல்பொருட்களை அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்தது
ரேந்திர மோடி வாஷிங்டன் DC யில் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் அமெரிக்கா $ 100 மில்லியன் மதிப்புள்ள 200 க்கும் மேற்பட்ட கலாச்சார தொல்பொருட்களை திருப்பிக் கொடுத்தது.
“சிலர் இந்த பொருட்களைப் பண அடிப்படையில் அளவிடுவர் ஆனால் எங்களுக்கு இது அதற்கும் மேலானது. இது எங்கள் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தின் ஒரு பகுதி,” என்று பிளேர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் கூறினார்.
திரும்பக் கொடுக்கப்பட்ட பொருட்களில் மத சிலைகள், சிற்பங்கள் மற்றும் டெர்ராகோட்டா துண்டுகள், அதில் சில 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய, இந்தியாவின் மிக முக்கியமான சில மத தளங்களிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டவை ஆகியன அடங்கும்.
வெளிநாட்டிற்கு குடியேறிய சில சாமானிய இந்தியர்கள் குழுவின் பல வருடமான கடின உழைப்பு தான் செவ்வாய்க்கிழமை அன்று நடந்த இந்த நிகழ்விற்கு காரணம்.
“நமது தெய்வங்களை வீட்டிற்கு அழைத்து வாருங்கள்” என்பது தான் அமெரிக்க அரசாங்கத்தின் உள்நாட்டு பாதுகாப்பு புலனாய்வு துறையுடன் சேர்ந்து பணிபுரிந்த இந்தியா பிரைட் ப்ராஜக்ட் (IPP) என்ற குழுவின் குறிக்கோள். இந்தத் துறை நியூயார்க்-அடிப்படையிலான பழம்பொக்கிஷங்கள் கடத்தல்காரர் சுபாஷ் கபூரை விசாரணை செய்து 2012 ஆம் ஆண்டுக் கைது செய்யப்பட்டு இப்போது தமிழ்நாடு சிறையில் இருக்கிறார். இந்த 200 தொல்பொருள்களும் அமெரிக்காவின் அருங்காட்சியகங்கள் அல்லது தொல்பொருள்கள் சேகரிப்பவர்களிடம் கபூர் விற்றது.
மேலும் பல திருடப்பட்ட கலைப்பொருட்களான நடராஜர் மற்றும் அர்தனாரீஸ்வர சிலைகளை ஆஸ்திரேலியாவிலிருந்தும் உமா பரமேஸ்வரி சிலையைச் சிங்கப்பூலிருந்தும் மீட்டு திரும்பக் கொடுத்ததாக IPP கூறுகிறது. “இன்று கொடுக்கப்பட்ட பல தொல்பொருள்கள் எங்கள் ஆய்வின் ஒரு பகுதியாக இருந்தது,” என்று IPP யை விஜய் குமாருடன் சேர்ந்து இயக்கும் சிங்கப்பூர்-வாழ் அனுராக் சக்சேனா மின்னஞ்சல்மூலம் கூறினார்.
“அமெரிக்கவில் உள்ள அரசாங்க விசாரணை அதிகாரிகள் மற்றும் அருங்காட்சியக அதிகாரிகள் கைப்பற்றியுள்ள சிலை அல்லது அவர்களின் சேகரிப்பில் உள்ள ஓவியம், இந்தியாவில் உள்ள கோவிலில் இருந்து திருடப்பட்ட அதே தான் என்பதை அதன் காப்பகங்கள் அல்லது புத்தகங்களில் இருக்கும் பல பழைய சிலைகளின் புகைப்படங்களுடன் கவனமாக பொருத்தம் பார்த்து உதவுவது தான் IPPயின் வேலை” என்று சக்சேனா கூறினார்.
IPP இதைப் பல தொண்டர்களின் உதவியுடன் செய்கிறது. அவர்கள் உலகம் முழுவதும் சென்று அருங்காட்சியகங்களில் உள்ள இந்திய பழம்பொக்கிஷங்களை புகைப்படம் எடுத்து அதைத் திருடப்பட்ட தொல்பொருள்களோடு பொருத்தம் பார்ப்பார்கள். IPP அதன் வெற்றியினால் சந்தோஷமாக இருந்தாலும், திருடப்பட்ட கலைப்பொருட்களை மீட்டெடுக்கும் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை (ASI)இன்னும் செயல்திறனுடன் இருக்க விரும்புகிறது.
இப்போது திரும்பக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில், $ 1.5 மில்லியன் மதிப்புள்ள, சென்னையின் சிவன் கோவிலிலிருந்து திருடப்பட்ட ஒரு இந்து மதம் மறைபொருள் மற்றும் சோழர் கால (ஏறத்தாழ 850 கி.பி.-1250 கி.பி.) கவிஞருமான மாணிக்கவாசகரின் சிலையும் ஒன்று.
மேலும் 1000 வருடம் பழமையான இந்து மதம் கடவுள் கணேஷினுடைய ஒரு வெண்கல சிற்பமும் அந்த திரும்பக் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ளது.
இந்தியாவின் அதிர்ச்சியூட்டும் வரலாறு மற்றும் அழகான கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் தொல்பொருட்கள் தங்கள் நாட்டிற்கு பயணத்தை தொடங்குகின்றன என்று அமெரிக்க அட்டர்னி ஜெனரல் லொரிட்டா ஈ லிஞ்ச் கூறினார்.
இந்திய பிரதமர் ந
“இந்த நாடு திரும்பும் பொருட்கள் இந்திய கலாச்சாரத்தின் மீது நாங்கள் வைத்திருக்கும் பெரிய மரியாதையின் அடையாளமாக இருக்கும் என்பது என்னுடைய மற்றும் அமெரிக்க மக்களினுடைய நம்பிக்கை, “என்று அவர் கூறினார்.
“நமது உலக சமூகத்தின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பது முக்கியமான வேலை, நாங்கள் இந்த விலைமதிப்பற்ற பொருட்களை அவற்றின் உண்மையான உரிமையாளர்கள் அடையாளம் கண்டு அவை தோன்றிய நாடுகளுக்குத் திரும்ப அனுப்ப அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்,” என்று உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் ஜே ஜான்சன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திருடப்பட்ட தொல்பொருட்களை மீட்பதில் இந்தியா மிக மோசமான நிலையில் உள்ளது. கலாசார அமைச்சகத்தின் படி, 1976 ஆம் ஆண்டிலிருந்து 19 திருடப்பட்ட பொருட்கள் தான் திரும்ப வந்துள்ளது.
எனினும், திருடப்பட்ட பொருட்கள் திரும்ப வரும் வேகம் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. “துரதிர்ஷ்டவசமாக, உலகளவில் எந்த விளைவும் இல்லாத மண்டலமாக இந்தியா அறியப்படுகிறது”. இதற்குக் காரணம் இந்தியா இன்னும் வெற்றிகரமாக ஒரு குறிப்பிடத் தக்க பாரம்பரிய தொல்பொருள் திருடும் குற்றவாளிக்குக்கூட இன்னும் தண்டனை கொடுத்ததில்லை,” என்று விஜய் குமார் கூறினார். “ஆனால் இந்த நிலையை மாற்ற இந்தியா மற்ற நாடுகளிடமிருந்து பல சிறந்த நடைமுறைகளைக் கற்றுக்கொள்ளலாம். பாரம்பரியத்தை பாதுகாக்க போலீஸ் அமைத்தல், ஒரு தேசிய காப்பகத்தைக் கட்டுதல், இலக்கு நாடுகளுடன் ஒப்பந்தம் கையெழுத்திடுதல் மற்றும் தவல்களை பகிர்தலும் நிபுணத்துவமும் தான் நாம் எளிதாகச் செய்யக்கூடிய விஷயங்கள் சில” என்றும் விஜய் குமார் கூறினார்.