மும்பை:
பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதையொட்டி, மும்பையில் உள்ள பிரபலமான சித்தி விநாயகர் கோவிலுக்கு முகேஷ் அம்பானி தனது குடும்பத்தின ருடன் வந்து திருமண அழைப்பிதழை வைத்து வணங்கினார்.
மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவில் பிரபலமானதும், சக்தி வாய்ந்த தாகவும் கருதப்படுகிறது. இங்குள்ள விநாயகரின் தும்பிக்கை மற்ற விநாயகர் சிலைகளில் காணப்படுவதுபோல இடது புறமாக வளைந்திருக்காமல் வலது புறமாக வளைந்திருக்கும்.
அதுபோல, இந்த விநாயகருக்கு நெற்றிக்கண் இருப்பதும் விசேஷமாக கருதப்படுகிறது. விநாயகரின் இருபுறமும் ரித்தி மற்றும் சித்தி என்ற இரண்டு பெண் தெய்வங்களின் விக்ரஹங்கள் காணப்படும். இந்த இரண்டு பெண் தெய்வங்களுடன் விநாயகர் காட்சியளிப்பதால் இந்தக் கோயில் சித்தி விநாயகர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. ரித்தி மற்றும் சித்தி என்ற பெண் தெய்வங்கள் தூமை, வெற்றி, செல்வச் செழிப்பு மற்றும் வளமான வாழ்வு என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வடமாநில பிரபலங்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர், சித்திபுத்தி விநா யகரை வழிப்பட்டே தங்களது பணிகளை தொடங்குவது வழக்கம்.
அதுபோல, பிரபல ரிலையன்ஸ் தொழில்நிறுவனங்களின் அதிபரான முகேஷ் அம்பானியும் தனது முதல் வணக்கத்தை சித்திபுத்தி விநாயகருக்கே செலுத்தி விட்டு பணியை தொடங்கி வருகிறார்.
ஏற்கனவே கடந்த வருடம் இறுதியில் தனது மகள் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தி முடித்த அம்பானி குடும்பத்தினர், தற்போது தனது மகன் ஆகாஷ் அம்பானி யின் திருமணத்தை சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதற்காக அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழை சித்திபுத்தி விநாயகர் காலடி யில் வைத்து விசேஷபூஜை செய்து வழி பட்டனர்.
இந்த விசேஷ பூஜைக்கு முகேஷ் அம்பானி தனது மனைவி மற்றும் மகன் ஆகாஷ் அம்பானியுடன் வருகை தந்திருந்தார்.
ஆகாஷ் அம்பானி – சோக்லா மேத்தாவின் திருமணம் மார்ச் 9ம் தேதி நடை பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மீண்டும் அம்பானி குடும்பத்தில் திருமண உற்சாகம் கலை கட்டி வருகின்றது. மும்பை ஜியோ வோர்ல்டு செண்டர், பாந்த்ரா குர்லா அரங்கத்தில் திருமணம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு பின்னர் திருமண வரவேற்பு மார்ச் 10ம் தேதியும், திருமண கொண்டாட்டம் மார்ச் 11ம் தேதி நடைப்பெற உள்ளதாக கூறப்படுகிறது.