வியன்னா: கென்ய நாட்டைச் சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியனான எலியுட் கிப்சோக், மாரத்தான் ஓட்டத்தை 2 மணிநேரங்களுக்குள் கடந்த உலகின் முதல் மனிதர் என்ற மாபெரும் சாதனையைப் படைத்துள்ளார்.

இவர் ஓட்ட தூரத்தைக் கடப்பதற்கு எடுத்துக்கொண்ட காலஅளவு 1 மணிநேரம் 59 நிமிடங்கள் மற்றும் 40.02 விநாடிகள். ஆனால், மாரத்தானைப் பொறுத்தவரை, ஓடிய நேரம் என்பது சாதனையாக கணக்கிடப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிப்சோக், முன்னதாக தனது சாதனையை நிலவில் மனிதன் இறங்கியதோடு ஒப்பிட்டிருந்தார். பந்தய தூரத்தைக் கடந்ததும், தனது மார்பில் இரண்டு முறை அடித்துக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

“இது எனது வாழ்வின் மிகச்சிறந்த தருணம். இதற்காக கடந்த 4.5 மாதங்களாக நான் கடும் பயற்சி மேற்கொண்டேன். இதன்மூலம் வாழ்க்கையில் எதற்குமே எல்லையில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. எனக்குப் பிறகு இதை பலபேர் நிகழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார் கிப்சோக்.

[youtube-feed feed=1]