புனே: தனது முதல் இன்னிங்ஸில் 200 ரன்களைத் தொடுவதே கடினம் என்று கருதப்பட்ட தென்னாப்பிரிக்க அணி, 275 ரன்களை எடுத்துவிட்டுதான் ஓய்ந்தது.

ஃபிலாண்டர் மற்றும் கேஷவ் மகராஜ் என்ற இரண்டு பந்துவீச்சாளர்களைப் பிரிக்க இந்திய அணி 47 ஓவர்கள் எடுத்துக்கொண்டதுதான் இன்றைய ஆட்டத்தின் கொடுமையாக இருந்தது.

தென்னாப்பிரிக்க அணி 162 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், சரி, அந்த அணிக்கு ஃபாலோ ஆன்தான் என்று அனைவரும் நினைத்த நிலையில், ஃபிலாண்டரும் மகராஜும் எல்லோரின் பொறுமையையும் சோதித்துவிட்டனர்.

ஃபிலாண்டர் 196 பந்துகளுக்கு 44 ரன்களையும், மகராஜ் 132 பந்துகளுக்கு 72 ரன்களையும் சேர்த்தனர். இதனால் இந்திய அணிக்கு மூன்றாம் நாள் ஆட்டமே வீணாகிவிட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்திய அணி இந்த விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்தியா தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்த, ஜடேஜாவுக்கு 1 விக்கெட் கிடைத்தது.