டில்லி
முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார்.
பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவஜோத் சிங் சித்து இடையே கடும் பனிப்போர் நிலவியது. இந்நிலையில் அமரீந்தர் சிங் தனது பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவி வகித்து வருகிறார்.
தனது ராஜினாமா கடித்தஹ்டை ஆளுநரிடம் கொடுத்த உடன் அமரீந்தர் சிங் தாம் காங்கிரஸ் கட்சியில் மூன்றாம் முறையாக அவமானப்படுத்தப்பட்டாலும் தொடர்ந்து காங்கிரஸிலேயே இருப்பேன் என தெரிவித்தார். மேலும் தமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தமது ஆதரவாளர்களுடன் பேசி முடிவு எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவரது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்துப் பல ஊகங்கள் கிளம்பின. அவர் புதிய கட்சி தொடங்கலாம் எனவும் ஒரு சிலர் கூறி வந்தனர். இந்நிலையில் 2 தினங்களாக டில்லியில் முகாம் இட்டுள்ள அமரீந்தர் சிங் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். இதன் மூலம் அவர் பாஜக வில் இணைவது உறுதியாகி உள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.