‘பேக் டூ தி ரூட்ஸ்’ என்ற புத்தகத்தை நடிகை தமன்னா எழுதியுள்ளார்.

சமீபத்தில் தமன்னா நடிப்பில் வெளியான ‘நவம்பர் ஸ்டோரி’ வெப் சீரிஸ் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது எழுத்தாளராகவும் மாறியுள்ளார் தமன்னா. லைஃப்ஸ்டைல் பயிற்சியாளர் லூக் காவ்டின்ஹோ உடன் இணைந்து ‘பேக் டூ தி ரூட்ஸ்’ என்ற புத்தகத்தை தமன்னா எழுதியுள்ளார். இந்தியாவின் பண்டைய வாழ்க்கை முறைகளின் மூலம் நோய்களைத் தடுப்பது, ஆயுளை நீட்டித்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது பற்றிப் பேசுகிறது.

பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் பதிப்பகம் வழங்கும் இப்புத்தகம் வரும் ஆகஸ்ட் 30 அன்று வெளியாகிறது.

[youtube-feed feed=1]