ராஜஸ்தானில் கொல்லப்பட்டவர் பால் உற்பத்தியாளர்தான்- ஆதாரங்களை காட்டியும் பலனில்லை..!

Must read

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் பசுகாவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டவர்  பால் உற்பத்தியாளர்தான் என்ற தகவல் உறுதியாகி உள்ளது. ராஜஸ்தானின் ஆல்வார் நகர் அருகே கடந்த 1-ம் தேதியன்று இஸ்லாமியர்கள் சிலர் டெம்போவில் மாடுகளை ஏற்றிச்சென்றுள்ளனர். அப்போது, வண்டியை வழி மறித்த பசு பாதுகாவலாளர்கள் என

சொல்லிக் கொண்டவர்கள் வண்டியில் இருந்தவர்களை இழுத்து வெளியே போட்டு இரும்பு கம்பி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூர தாக்குதல் நடத்தினர்.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கின.  இந்தத் தாக்குதலில் ஜெய்சிங்பூர் கிராமத்தை சேர்ந்த 55 வயதான பெலுகான் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜெய்சிங்பூர் கிராமத்தில் பால் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளில் பெலுகானும் ஒருவர். இவருக்கு இரு மகன்களும் மனைவியும் உள்ளனர்.

மகன்களில் ஒருவரான இஷ்ரத் என்ற இளைஞர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தனது அப்பாவும் இன்னொருவரும் ஒரு டெம்போவில் இரண்டு பசுமாடுகளும், கன்று குட்டிகளுடன் சென்றனர். மற்றொரு டெம்போவில் தானும் மற்றொரு நண்பரும் மூன்று பசு மாடுகள் மற்றும் கன்றுகுட்டிகளுடன் சென்றதாக கூறினார்.

ப்போது வழிமறித்த பசு காவலர்கள் தங்களை கீழே இறங்கச் செய்து சரமாரியாக தாக்கியதாக குறிப்பிட்டார்.  சட்ட விரோதமாக பசுவை கடத்தி சென்றதாக தங்கள் மீது முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஆனால் மாடுகளை 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியதற்கான ஆதாரங்களை காட்டியும் (serial number 89942 dated April 1, 2017) போலீசார்  தாக்கியதோடு தங்களுக்கு எதிராக எப் ஐ ஆர் பதிவு  செய்தனர் என்றும் இர்சாத்  தெரிவித்தார். மேலும் தங்களிடமிருந்த சுமார் ஒரு லட்சம் பணத்தையும்  பசுகாவலர்கள் களவாடிச் சென்றுவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பசு காவலர்களால் பால் உற்பத்தியாளர் கொல்லப்பட்ட சம்பவம் ராஜஸ்தான் உள்பட வடமாநில பால் உற்பத்தியாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

More articles

Latest article