டில்லி,
500-1000 ரூபாய் செல்லாது என்ற தகவல் பா.ஜ.கவினருக்கு முன்பே தெரியும். எனவே, அவர்கள் தங்க நகைகளை வாங்கி குவித்துவிட்டனர் என்று பகிரங்க குற்றச்சாட்டை மத்திய அரசு மீது சுமத்தியிருக்கிறார் டில்லி முதல்வர் கெஜ்ரிவால்.
கடந்த 8ந்தேதி இரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அதிரடி உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்தார். இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதஸ்தைக்கு ஆளாகி வருகின்றனர்.
ஆனால், இதுகுறித்த செய்தி பாரதியஜனதா தலைவர்களுக்கு முன்கூட்டியே தெரியும் என்று பகிர் குற்றச்சாட்டை மத்திய அரசு மீது சுமத்தியிருக்கிறார் டெல்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி தலைவரு மான அரவிந்த் கெஜ்ரிவால்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்த விஷயம், ஒரு வாரத்துக்கு முன்பே பாஜ தலை வர்களுக்கு தெரிந்துள்ளது என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை மோடி ரகசியமாக மேற்கொண்டார் என தகவல் வெளியானது. இந்த நிலையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
500, 1,000 ரூபாய்க்கு தடை விதிக்கப்படும் ரகசியம் பாஜ மற்றும் அவர்களது நண்பர்களுக்கு கடந்த வாரமே தெரிந்துள்ளது.
இதையடுத்து பாஜவினர் ஏற்கனவே தாங்கள் வைத்திருந்த பணத்தை கொண்டு தங்க நகைகள் மற்றும் பொருட்களை வாங்கி குவித்து விட்டனர்.
கருப்பு பணத்தை ஒழிக்க முடிவு செய்து உயர் மதிப்பிலான நோட்டுகளை தடை செய்த மோடி, 2000 ரூபாயை வெளியிட்டது ஏன்?
விரைவில் சந்திக்க உள்ள உபி, பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கெஜ்ரிவால் மத்தியஅரசு மீது குற்றம் சுமத்தி உள்ளார்.