சென்னை:
மிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி மற்றும் தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட த.மா.கா. பெரும் தோல்வியை சந்தித்து. இதையடுத்து அந்த கூட்டணியில் இருந்து விலகி, தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க முயன்றது.
dc-cover-qqj46c4jcpe6hmnaanba96p8s4-20160330063528-medi
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலினை சில நாட்களுக்கு முன் சந்தித்து பேசினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசியதாக தெரிவித்தார். இதையடுத்து தி.மு.க. கூட்டணியில் த.மா.கா சேரும் என்று செய்தி பரவியது.
 
ஆனால், அடுத்த நாளே, “தி.மு.க.வுடன் கூட்டணி என்பது ஜி.கே. வாசன் விருப்பமே” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தி.மு.க.வின் பொதுச்செயலாளர் அன்பழகனும், முந்தைய சட்டமன்ற தேர்லில் அமைந்த கூட்டணியே தொடரும் என்று அறிக்கை வெளியிட்டார்.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்பதை நினைத்துப் பார்க்க முடியாத நிலை, மக்கள் நலக்கூட்டணி என்பது  கடந்த தேர்தலிலேயே கசந்துவிட்டது, தி.மு.க.வும் புறக்கணித்துவிட்டது.
இந்த நிலையில் வேறு வழியின்றி, வரும் உள்ளாட்சித் தேர்தலில் த.மா.கா. தனித்து போட்டியிடும் என்று ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார். மேலும், தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப படிவங்கள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன என்றும், வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.