சென்னை: அறிவியலோடு பஞ்சாங்கங்களை ஒப்பிடக்கூடாது என முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் பேசும்போது, “தற்போது போட்டிகள் நிறைந்த உலகமாக உள்ளது. மேற்படிப்பு என்பதை தாண்டி, வேலைக்கு செல்வதற்கு கூட போட்டித் தேர்வுகள் என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. எனவே, அதற்கு தேவை யான பயிற்சிகளையும், முன்னெடுப்புகளையும் செய்தால்தான், இந்திய அளவில் நம் தமிழக மாணவர்கள் முன்னேற முடியும் என்றவர், கடந்த, 1969ஆம் ஆம் ஆண்டு நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்டோர் கால் பதித்தது உண்மை. இதன்மூலம், நிலவுக்கு, விண்வெளிக்கு மனிதர்கள் சென்று வர முடியும் என்பது நிரூபிக்கப்பட்டது. அதுபோல நிலவில் விவசாயமும் செய்ய முடியும் என்றார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்தவர், அறிவியலோடு பஞ்சாங்கங்களை ஒப்பிடக்கூடாது என்று கூறியவர் அடுத்த இரு ஆண்டுகளில் இந்தியர் நிலவில் கால் பதிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தி திணிப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், தாய்மொழி கல்விதான் வாழ்வில் மேம்பட உறுதுணையாக இருக்கும் என்றும், மற்ற மொழிகள் அவசியமில்லை என்றும் கூறினார்.