சென்னை:
தமிழகத்தில் ஊரடங்கு மே 17ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கோயில் களுக்கு தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பராமரிப்பு பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாகவும், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நோக்கில் இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், வழிப்பாட்டுத் தளங்கள், போக்குவரத்து, தொழிற்நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் தமிழக அரசு கோவில்களை திறக்க அனுமதி வழங்கி உள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கோயில் பராமரிப்பு பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் 33% பணியாளர்களுடன் கோயில் அலுவலகங்கள் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
பணியாளர்கள் முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற வேண்டும்.கொரோனா பரவலை தடுக்க அனைத்து திருக்கோயில்களிலும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.
திருக்கோயில்களில் நோய்தடுப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.