
மதுரை,
மேலூரில் டி.டி.வி.தினகரனின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்க, தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
எடப்பாடி அணியினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக டிடிவி தினகரன் தனியாக கட்சி நிர்வாகிகளை அறிவித்தார்.அதைத்தொடர்ந்து முதல் பொதுக்கூட்டம் மதுரை அருகே மேலூர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு தமிழக அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை. இந்நிலை யில், அதிமுக மேலூர் நகரச் செயலாளர் சரவணன் பொதுக்கூட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்க உத்தரவிடுமாறு மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், மேலூரில் டி.டி.வி.தினகரனின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும்,கூட்டத்திற்கு அனுமதி வழங்கவும், சட்டம் – ஒழுங்கை பராமரிக்கவும் காவல்துறையை நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
[youtube-feed feed=1]