சென்னை:
த்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி தந்து பொது முடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என அதிமுக பிரதிநிதி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொதுமுடக்கம் நாளை மறுநாளுடன் முடிவடையவுள்ளது. கடந்த 14 நாள்களாக பொதுமுடக்கம் அமலில் இருந்தபோதிலும், நாள்தோறும் 36,000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றார். இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் பத்தாவது தளத்தில் 19 கொண்ட மருத்துவ நிபுணா்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனையின் போது, பொதுமுடக்கத்தை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க அரசுக்கு மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது.

இதையடுத்து நடைபெற்று வரும் பேரவை கட்சிகளைச் சோ்ந்த 13 பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடனான ஆலோசனையில் பேசிய அதிமுகவின் விஜயபாஸ்கர், பால், காய்கறி, மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கவேண்டும். நடமாடும் வண்டிகள் மூலம் மக்களின் வீடுகளுக்கே சென்று காய்கறி விற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.