சென்னை: 15 மாநகராட்சிகளில் திருச்சி, நெல்லை உள்ளிட்ட 9 மாநகராட்சிகள் அனைத்து பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் இடஒதுக்கீடு எந்தெந்த மாநகராட்சிகளில் உள்ளது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வேலூர், தூத்துக்குடி மாநகராட்சிகளில் தாழ்த்தப்பட்ட இருபாலரும் போட்டியிடலாம்.
திருச்சி, நெல்லை, நாகர்கோவில், திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய மாநகராட்சிகளில் அனைத்து பிரிவைச் சேர்ந்த பெண்கள் மட்டும் போட்டியிடலாம்.
சேலம், சென்னை, திருப்பூர், தஞ்சை, ஆவடி, ஓசூர் ஆகிய மாநகராட்சிகளில் ஆண்கள், பெண்கள் போட்டியிடலாம். அதாவது அனைத்து பிரிவினரும் போட்டியிட தகுதியானவர்கள். கோவை மாநகராட்சி முதல்முறையாக பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.