சென்னை: திமுக தலைமையிலான நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில், விசிகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில், விசிக தனிச் சின்னத்தில் போட்டியிடும் என அறிவித்து உள்ளது.
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மதிமுகவுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில் இன்று காலை திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டது.
அதன்படி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் எந்த தொகுதி என அறிவிக்கப்படவில்லை. ஆனால், தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம் என மதிமுக தலைவர் வைகோ அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் விசிக வேட்பாளர்கள், தங்களது சொந்த சின்னமான பானை சின்னத்தில் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளனர்.