சென்னை:

ஜினியுடன் கூட்டணி அமைக்கலாமா என்பது குறித்து யோசிப்பதாக  பாமக தலைவர் ராமதாஸ் கூறி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கட்சி தொடங்கப்போறேன்…. என்று கடந்த 2 ஆண்டுகளாக சொல்லி வரும் ரஜினி… தனது அரசியல் ஆன்மிக அரசியல் என்று கூறிக்கொண்டே,  இதுவரை கட்சி தொடங்குவதற்கான  எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், பாரதிய ஜனதா கட்சியின் ஊதுகுழலாக நீடித்து வருகிறார்.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாமக தலைவர் ராமதாஸ், ரஜினி கட்சி ஆரம்பித்தால் கூட்டணி குறித்து பேசுவோமா என யோசிக்கிறேன்; ரஜினி கட்சி தொடங்கட்டும், அதன் பின் பார்க்கலாம் என்று தெரிவித்து உள்ளார்.

நடிகர்கள் அரசியலுக்கு வருகை கடுமையாக எதிர்த்து வரும் ராமதாஸ், தற்போது ரஜினியுடன் கூட்டணி வைக்கலாம் என கூறியிருப்பது சலசலப்பை எற்படுத்தி உள்ளது.

பாமக தலைவரின் ஆசையை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். டயர் நக்கி என்று கடுமையாக விமர்சித்த  அதிமுகவிடமே மீண்டும் மண்டியிட்ட பாமக, ரஜினி என்ன, எந்தவொரு நபர் மூலம் ஆதாயம் கிடைத்தாலும், அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொள்வார் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் சமீபத்தில் செய்தியளார்களிடம் பேசிய ரஜினியின் நண்பர் தமிழருவி மணியன், ரஜினி ஏப்ரல் மாதம் கட்சி ஆரம்பித்து ஆகஸ்ட்டில் ஒரு மாநாடு நடத்தி பின் செப்டம்பர் முதல் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள  இருப்பதகவும்,  பாமக இவருடன் கூட்டணி வைக்கும் என்றும் தெரிவித்திருந்தார்,.

இந்த நிலையில்தான், ரஜினியுடன் கூட்டணி வைக்க ஆசை என்று ராமதாஸ் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.