சண்டிகர்:

ரியானாவில் சவுதாலா கட்சியுடன் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைத்த பாஜக ஆட்சி தற்போது ஆட்டம் கண்டு வருகிறது… எம்எல்ஏ ஒருவர் ஆட்சிக்க எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளதால், விரைவில் ஆட்சி கவிழாலாம் என்றும் கூறப்படுகிறது. இது பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரியானா மாநிலத்தில் கடந்த அக்டோபர் மாதம் 21ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு ஆட்சி அமைக்க 46 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. ஆனால், பாஜகவுக்கு 40 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 31 இடங்களும் கிடைத்தது. இதனால் முக்கிய கட்சிகள் சிறிய கட்சிகளின் உதவியை நாடின.

இந்த நிலையில், பாஜகவுக்கு  ஆதரவளிப்பதாக  10 இடங்களை கைப்பறியிருந்த  தேவிலாலின் பேரனான துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சி கூறியது.  துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதல்வர் பதவி ஆசைக்காட்டி பாஜக தன்வசம் இழுத்தது. இதையடுத்து அங்குகூட்டணி ஆட்சி அக்டோபர் 27ந்தேதி பதவி ஏற்றது.

இந்த நிலையில் துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியின் எம்எல்ஏகளில் ஒருவர் திடீரென கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.  அவருக்கு ஆதரவாக மேலும் சில எம்.எல்.ஏக்களும் தலைமைக்கு எதிராக திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி பாஜகவுக்கு ஆதரவு வழங்கியதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தற்போது சில எம்எல்ஏக்களும் போர்க்கொடி தூக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜனநாயக ஜனதா கட்சியின் தலைமைக்கு எதிராக கொடிபிடித்துள்ள எம்எல்ஏக்களுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வரும் நிலையில், அவர்கள் தங்களது ஆதரவை விலக்கிக்கொள்வதாக எந்த நேரத்திலும் அறிவிக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அங்கு பாஜக கூட்டணி ஆட்சி மெஜாரிட்டியை இழக்கும் வாய்ப்பு உருவாகி, ஆட்சியை இழக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையில்,  பாஜக கூட்டணி ஆட்சி மெஜாரிட்டியை சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்து வருகிறது.