டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஜம்மு காஷ்மீரில் 32 முக்கிய அரசியல் தலைவா்கள் உள்பட 100க்கும் குறைவானவா்களே தடுப்புக் காவலில் உள்ளனர். அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்.

ஜம்மு காஷ்மீர் நிலைமை மாறி, மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்க பாஜக ஆதரவளிக்கும். அதற்காக குழு அமைக்கப்பட்டு, எல்லைகள் வரையறுக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

தற்போது லடாக் யூனியன் பிரதேசத்திற்குள்பட்ட கார்கில், லே பகுதியில் இண்டர்நெட் வழங்கப்பட்டுவிட்டது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370, 35 (ஏ) ஆகியவை நீக்கப்பட்டதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்றார். முன்னதாக துணைநிலை ஆளுநர் கிரிஷ் சந்திரமர்முவை ராம் மாதவ் சந்தித்து பேசினார்.