மதுரை: கூட்டணி என்பது தோளில் போடும் துண்டு போன்றதே. தேவையில்லை என்றால் தூக்கிப்போட்டு விடலாம் என்று, அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகியிருப்பது குறித்து அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு தெரிவித்து உள்ளார்.
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே முறிவு ஏற்பட்டு உள்ளது. இதனால், அதிமுகவின் தயவால் எம்.பி.யான அன்புமணி ராமதாஸ் பதவி விலக வேண்டும் என அதிமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ செல்லூர் ராஜூ, கூட்டணி என்பது தோலில் போடும் துண்டு மாதிரி, துண்டை தேவையென்றால் தோலில் போட்டு கொள்ளலாம். துண்டு தேவையில்லை என்றால் கழட்டி வைத்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.
மேலும், அதிமுக கூட்டணி கட்சகிளை நம்பி ஒருபோதும் இருந்ததில்லை. கூட்டணி என்பது சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில்தான் எடுபடும். பாமக வெளியேறியதில் வருத்தம் இல்லை என தெரிவித்தார்.