அலகாபாத்: உத்தரப் பிரதேசத்தில் அலகாபாத் நகரில் இரவு நேரங்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மசூதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டாம் என்று காவல்துறை தலைவர் கே.பி.சிங் வலியுறுத்தி உள்ளார்.  அலகாபாத் பல்கலைக்கழக துணைவேந்தரின் புகாரின் பெயரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட நீதிபதி, காவல்துறை சிறப்பு கண்காணிப்பாளர் ஆகியேருக்கு கடிதம் ஒன்றையும் காவல்துறை தலைவர் எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

அலகாபாத் உள்ளிட்ட 4 அண்டை மாவட்டங்களில் மசூதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

[youtube-feed feed=1]