டில்லி

ந்த மே மாதம் நடைபெற உள்ள அனைத்து எழுத்துப் பூர்வமான தேர்வுகளையும் மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது.

நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாகப் பாதிப்பு அதிகரித்து வருகிறது.  உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.  இங்குத் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தைத் தாண்டி வருகிறது.

இதையொட்டி மத்திய அரசு பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.  மக்கள் ஒரே இடத்தில் அதிக அளவில் கூடுவதைத் தவிர்க்க வழிபாட்டுத் தலங்கள், அழகு நிலையங்கள், முடி திருத்தும் இடங்கள், திரையரங்குகள், மால்கள் உள்ளிட்ட பல இடங்கள் மூடப்பட்டுள்ளன.

மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த மாதம் அதாவது மே மாதம் நடைபெற உள்ள அனைத்து எழுத்துப் பூர்வமான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.  எப்போது தேர்வு நடக்கும் என்பது குறித்து ஜூன் முதல் வாரம் ஆய்வு செய்து முடிவு எடுக்கப்பட உள்ளது.