ஊட்டி
இன்று ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்ப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றும் இன்றும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையொட்டி, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரிக்கு இன்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள சுற்றுலா தளங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லங்கள் உட்பட அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று (மே 26) மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.