ண்டிகர்

ஞ்சாப் மாநிலத்தில் பதிவு செய்தோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க உள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை தடுக்க கொரோனா தடுப்பூசி பல நாடுகளிலும் போடப்பட்டு வருகிறது.  வரும் 16 ஆம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது.  இதற்காக கொரோனா தடுப்பூசிகள் நாடெங்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக புனேவில் இருந்து சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்யும் கோவிஷீல்ட் மருந்தும், ஐதராபாத்தில் இருந்து பாரத் பயோடெக் நிறுவனம் உற்பத்தி செய்யும் கோவாக்சின் மருந்தும் அனைத்து மாநிலங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளன.  முதல் கட்டமாக சுகாதார நல பணியாளர்களுக்கு அளிக்கப்பட உள்ளன.

பஞ்சாப் மாநில சுகாதார அமைச்சர் பல்பீர் சிங் சித்து, “பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 1 கோடியே 60 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளனர்.  எங்களுக்கு 2.04 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.  முதல் கட்டத்தில் எங்களது இணையத்தில் பதிவு செய்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.