வுகாத்தி

ரிசாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் டிசம்பர் 31 வரை மூடப்பட்டிருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் மார்ச் முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அதையொட்டி அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன.

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆயினும் பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

ஒரிசா மாநிலம் இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தேர்வுகள், விடைத்தாள் திருத்துதல், நிர்வாகப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இல்லாத ஆசிரியர் மற்றும் உள்ள ஊழியர்கள் பணிக்காக அழைக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.