சென்னை: தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் முழு ஊடரங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால், ஆன்லைன் மூலமே கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்ற தொடக்க கல்வி இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
அதன்படி, 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை எந்த மாணவரையும் தேக்க நிலையில் வைக்கக் கூடாது, எந்த குழந்தையையும் பள்ளியை விட்டு வெளியேற்றகூடாது எனவும் தலைமை ஆசிரியர்கள் பள்ளி பதிவேட்டில் மாணவர்களின் தேர்ச்சி விவரத்தை பதிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.