சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர்வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வரும் 12ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படுவதாக தமிழக  முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் உயர்வகுப்பினருக்கான 10சதவித இடஒதுக்கீடு தீர்ப்பு, தென்மாநிலங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில், காங்கிரஸ். பாஜக தவிர அனைத்துக்கட்சிகளும் வரவேற்பு தெரிவித்து உள்ளன. இந்த நிலையில்,  10 சதவீத இடஒதுக்கீடு விஷயத்தில் தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு. எ.வ.வேலு, கே.என்.நேரு, வில்சன் எம்.பி., தலைமை செயலாளர் இறையன்பு  மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார்

இதையடுத்து, வரும் 12ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளத. இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பாக வும் 2 பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் 12ம் தேதி காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பாகவும் 2 பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.