ஷில்லாங்:

வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மேகாலயாவுக்குள் வரும் போது, அரசிடம் பதிவு செய்த பின்னரே உள்ளே வர வேண்டும் என்று அம்மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. ,இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே நாட்டிற்குள், ஒரு மாநிலத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு செல்பவர்கள் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய மக்கள் கட்சி தலைமையிலான மேகாலயா ஜனநாயக கூட்டணி அரசாங்கம் நடைபெற்று வருகிறது.  இந்த கூட்டணி அரசு,  இந்த புதிய சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. நேற்று நடைபெற்ற மேகாலயா அமைச்சரவை கூட்டத்தில், மேகாலயா குடியிருப்பாளர்கள், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம், 2016ல் (எம்.ஆர்.எஸ்.எஸ்.ஏ)  திருத்துவதற்கு ஒப்புதல் அளித்தது. அதைத்தொடர்ந்து இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்து உள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, துணை முதலமைச்சர் பிரஸ்டன் டின்சோங் கூறுகையில், “திருத்தப்பட்ட சட்டம் ஒரு கட்டளை வடிவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, அது உடனடியாக நடைமுறைக்கு வரும். மாநில சட்டசபையின் அடுத்த அமர்வில் இந்த கட்டளை முறைப்படுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

அதன்படி,  அனைத்து வெளிநாட்டினரும் மாநிலத்திற்குள் நுழைவதற்கு முன்பு அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும், இது ‘அரசாங்கம் மற்றும் மேகாலயா மக்களின் நலனுக்காக’ என்று கூறி உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவுக்கு சில சிறப்பு அந்தஸ்துகள் உள்ளன. இந்த நிலையில், மேகாலயா மாநிலத்தை சேராதவர்கள், மாநிலத்தின் உள்ளே 24 மணி நேரத்திற்கு மேல் தங்கினால், முதலில் அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசர சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

இந்த அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அவசர சட்டம் உடனே அமலுக்கு வந்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.