மும்பை: ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருந்த ‘வீவோ’ நிறுவனத்தை, இந்த 13வது சீசனுக்காக பிசிசிஐ இடைநீக்கம் செய்ததையடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கு வகிக்கும் அனைத்து சீன நிறுவனங்களும் விலக முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால், ஐபிஎல் தொடர் நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது.
இந்திய – சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக எழுந்த மோதல் காரணமாக, சீன எதிர்ப்பு மனநிலையை இந்தியாவில் ஏற்பட்டது. அதனையடுத்து, அந்நாட்டிற்கு எதிராக பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், புதிய டைட்டில் ஸ்பான்சரை பிசிசிஐ தேடிவரும் நிலையில், ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட வேறு சீன நிறுவனங்களும் ஐபிஎல் நிகழ்விலிருந்து வெளியே முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஸ்டார் தொலைக்காட்சி வருவாயில் பெரிய சரிவு ஏற்படும் என்று தெரிகிறது.