புவனேஸ்வர்

டிசா மாநிலத்தில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்து நாளை புதிய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஒடிசாவில்  பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.  இங்கு தற்போதுள்ள  நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ள நிலையில், அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். நாளை புதிய அமைச்சரவை அமைக்கப்பட உள்ள நிலையில், 20 அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை ஒடிசா சட்டப் பேரவைத் தலைவரிடம் அளித்துள்ளனர்.

நாளை மதியம் 12 மணிக்கு ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.  ஒடிசாவை ஆளும் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் அதன் ஐந்தாவது பதவிக்காலத்தின் மூன்று ஆண்டுகளை மே 29 அன்று நிறைவு செய்துள்ளது.  இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்திற்கு, முன்னதாக மாநிலத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களும் தங்கள் ராஜினாமாவைச் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த மறு சீரமைப்பு 2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை வலுப்படுத்தவும், புத்துயிர் பெறவும் ஒரு முக்கிய பயிற்சியாகக் கருதப்படுகிறது.  நாளை காலை 11.45 மணிக்கு புதிய அமைச்சரவை அமைச்சர்கள் ராஜ்பவன் மாநாட்டு மண்டபத்தில் பதவியேற்க உள்ள நிலையில், பிரதீப் அமத் மற்றும் லத்திகா பிரதான் ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.