நெல்லை,

ழக்கறிஞர் செம்மணி மீது போலீசார் நடத்தியுள்ள தாக்குதலை கண்டித்து, நாளை 07/11/2017 தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பணிபுறக்கணிப்பு செய்ய அனைத்து வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை பெருமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

கூடங்குளம் போராட்டக் குழு வழக்கறிஞர் செம்மணி கடந்த 3ந்தேதி  நள்ளிரவில் போலீஸாரால் கடத்தப்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்தது. இந்நிலையில், கடத்தப்பட்ட அவரை போலீசார் சரமாரி யாக  தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அவரது மனைவி சரோஜா கூறியதாவது,  கடந்த  3/11/17 இரவு 12-30 மணிக்கு வீட்டுக்கு வந்த போலீசார் அவரது கணவர் செம்மணியை அடித்து இழுத்துச் செல்வதை தனது சாம்சங் செல் போனில் படம் பிடித்ததாகவும், ஆனால், இன்ஸ்பெக்டர் ஜோன்ஸ் உத்திரவுப்படி ஜோஸ்,சாகர். என்ற 2 போலீசார் தனது வலது கையை பிடித்து முறுக்கியும், அடித்தும், செல் போனை பிடுங்கிச் சென்றதாகவும் கூறி உள்ளார்.

மேலும் போலீசார் தாக்கியதில் தனது கணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்றும், அவரை நாகர்கோவிலில் உள்ள  ஆசாரிப்பள்ளம் அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வந்தபோது, டாக்டர் பகவத்சிங் சிகிச்சை அளிக்க மறுத்துள்ளார் கண்டபடி திட்டி, கையை தொட்டுப்பார்க்ககூட மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், வழக்கறிஞர் செம்மணி மீது போலீசார் நடத்தியுள்ள தாக்குதலை கண்டித்து, நாளை 07/11/2017 தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பணிபுறக்கணிப்பு செய்ய அனைத்து வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை பெருமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.