புதுடெல்லி:
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் மீதான தடையை பிஃபா நீக்கியுள்ளது.

இதுதொடர்பாக தனது இணையத்தில் செய்தி வெளியிட்டுள்ள பிஃபா, “இந்திய கால்பந்து சம்மேளனத்தின் செயற்குழுவின் அதிகாரங்களை ஏற்க அமைக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவின் ஆணை நிறுத்தப்பட்டதையும், தினசரி விவகாரங்களில் AIFF நிர்வாகம் முழுக் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றது பிஃபா உறுதி செய்ததை அடுத்து தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை நீக்கம் காரணமாக 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் திட்டமிட்டபடி இந்தியாவில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel