டெல்லி: ஆகஸ்டு 17 முதல் 23 வரை நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் உள்ள மண்டிகள், சில்லறை சந்தைகள்  மற்றும் மக்கள் கூடும் இடங்களில், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மெஹெங்காய் சௌபால்” (“Mehengai chaupal” ) விலைவாசி உயர்வு பற்றி விழிப்புணர்வு பேரணி நடைபெறும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் ஆகியவற்றைக் கண்டித்து  நாடு முழுவதும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற  நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, பணவீக்கம் உள்ளிட்டவை பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அதை ஏற்க பாஜக அரசு மறுத்து விட்டதால், நாடாளுமன்ற இரு அவைசகளும் அமளிதுமளி பட்டது. மேலும், காங்கிரஸ் உறுப்பினர்கள், கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றதுடன், நாடாளுமன்றத்தில் இருந்து குடியரசு தலைவர் மாளிகை நோக்கி கருப்பு உடையுடன் பேரணி நடத்தினர். இந்த விவகாரம் நாடு முழுவதும் எதிரொலித்தது. மேலும், விலைவாசி உயர்வை கண்டித்து, நாடு முழுவதும் போராட்டங்களை காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து வருகிறது.

இதன் அடுத்த நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் உள்ள  சந்தைகள், மண்டிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மெஹெங்காய் சௌபால்” ( “Mehengai chaupal” ) விலைவாசி உயர்வு பற்றி மக்களிடையே  விழிப்புணர்வு ஏற்படும் வகையில் விழிப்புணர்பு பிரசார பேரணி  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மெஹெங்காய் சௌபால்” (விழிப்புணர்வு பிரசாரம்) பிரசார பேரணியானது  ஆகஸ்ட் 17ந்தேதி முதல் 23ந்தேதி வரை நடைபெறும் என்றும், இறுதியாக ஆகஸ்டு 28ந்தேதி அன்று தலைநகர் டெல்லியில் உள்ள  ராம்லீலா மைதானத்தில் கட்சியின் “மெஹெங்காய் பெ ஹல்லா போல்” பேரணிமுடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.