சென்னை

சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து தீர்ப்புக்களும் தமிழில் வெளியிடப்பட வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணியில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. சமீபத்தில் இந்த பல்கலைக்கழகத்தின் சிறப்புபட்டமளிப்பு விழா நடந்தது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அலந்துக் கொண்டார்.

அப்போது அவர் கேரள ஆளுநரும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான சதாசிவம், உச்சநீதிமன்ற நீதிபதி சரத் அரவிந்த்  மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமானி ஆகியோருக்கு சட்டவியல் முனைவர் பட்டம் வழங்கினார்.

இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கலந்துக் கொண்டார். அவர் தனது உரையில் தமிழகம் நீதிக்காக தலை வணங்கிய ஏராளமான மன்னர்களால் ஆளப்பட்டுள்ளது என பெருமை பட தெரிவித்தார்.

ராம்நாத் கோவிந்த் தனது உரையில், “சட்டம் குறித்து மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை உருவாகி உள்ளது. மக்கள் சட்டத்தை புரிந்துக் கொள்ள அவர்களுக்கு தெரிந்த மொழியில் தீர்ப்புக்கள் இருக்க வேண்டும். அதற்கு ஏதுவாக சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கள் அனைத்தும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.