சென்னை: வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், இன்று இரவு வெளியாகின. இதில், அனைத்து கருத்துக்கணிப்புகளுமே, சொல்லிவைத்தாற்போல், திமுக ஆட்சியமைக்கும் என்றே தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணி, குறைந்தபட்சம் 160 இடங்கள் முதல், அதிகபட்சம் 195 இடங்கள் வரை பெறும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ரிபப்ளிக் – சிஎன்எக்ஸ், இந்தியா டுடே, டுடே சாணக்யா, தந்தி டிவி உள்ளிட்ட பல்வேறு ஊடக நிறுவனங்கள், தங்களின் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.

அந்த கருத்துக் கணிப்புகள் அனைத்துமே, திமுகவே ஆட்சியமைக்கும் என்றே கூறியுள்ளன. அதேசமயம், திமுகவுக்கென்று தனிப்பட்ட முறையில் எத்தனை இடங்கள் கிடைக்கும் என்ற விபரங்கள் வெளியாகவில்லை.

திமுக கூட்டணியில், காங்கிரஸ், 2 கம்யூனிஸ்டுகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன.