சென்னை:

மிழகத்தில் நாளை  மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மாநில அரசு எடுத்து வரும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை  தனிமைப்படுத்த வேண்டும் என்று மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில், நாளை மாலை 6 மணி முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்று தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அத்தியாவசிய சேவைகள் மட்டும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சட்டமன்றத்தில் இன்று மானிய கோரிக்கை தொடர்பான விவாத்துக்கு பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளார்.

மேம், அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது எனவும். பொதுமக்கள்,  அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே வெளியில் வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.