சென்னை: பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் மீதான 3 வழக்குகளை ரத்து செய்தும், அவரை கைது செய்து சிறையில் அடைத்த உத்தரவுகள் செல்லாது என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக அரசுக்கு எதிராக பேசுபவர்களையும், சமூக வலைதளத்தில் பதிவிடுபவர்களை கைது செய்வதில் தமிழ்நாடு அரசின் காவல்துறை தீவிரமாக செயலாற்றி வருகிறது. அதனால் மாநிலம் முழுவதும் கஞ்சா உள்பட போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதுடன், சட்டம் ஒழுங்கும் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு  சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான அலெக்சிஸ் சுதாகர், தமிழ்நாடு காவல்துறையினரால் பல வழக்குகளில் கைது செய்யப்பட்டதுடன், அவர்மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.  ஆனால், அனைத்தையும் கடந்து தற்போது விடுதலையாகி உள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாமல்லபுரம் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் ரவுடி சத்யா என்பவர்  பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது, அங்கு வந்த  போலீஸார் சத்யாவை பிடிக்க முயற்சித்தபோது இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. பின்னர் சத்யாவை காவல்துறையினர்  துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.  இநத் வழக்கில்,  சத்யாவுக்கு துப்பாக்கி வழங்கியதாக  பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளரான உயர்நீதிமன்ற வழக்கறிஞர்ல, அலெக்சிஸ் சுதாகரையும் மாமல்லபுரம் போலீஸார் கைது செய்தனர்.  இது வழக்கறிஞர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதுமட்டுமின்றி, அவர்மீது பல்வேறு இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன்படி அடுத்தடுத்து கைது செய்தனர். இதையடுத்து, அவரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். ஆனால், அவர்மீதான குண்டர் சட்டத்தை  அறிவுரை குழுமம் ரத்து செய்ததால், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, தன்மீது  காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், அரசியல் காழ்புணர்ச்சியால், அரசுக்கு ஆதரவாக காவல்துறை நடந்துகொள்வதாகவும் குற்றம் சாட்டியதுடன், தன்னை  3 வழக்குகளில்  கைது செய்து சிறையில் அடைத்த உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி அலெக்சிஸ் சுதாகர் தனித்தனியாக 3 மனுக்களை தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் மீது, உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. வழக்கின் பல்வேறு கட்ட விசாரணைக்களுக்கு பிறகு, அலெக்சிஸ் சுதாகர்    மீதான, இந்த 3 வழக்குகளிலும் கைதுக்கான காரணங்களை மனுதாரருக்கு தெரிவிக்க வில்லை. அவரது குடும்பத்தினருக்கும் தகவல் கொடுக்கவில்லை. இது உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு விரோதமானது” என்று கூறி, அலெக்சிஸ் சுதாகர் மீதான 3 வழக்குகளை ரத்து செய்தும், அவரை கைது செய்து சிறையில் அடைத்த உத்தரவுகள் செல்லாது என அறிவி்த்தும் உத்தரவிட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற உத்தரவு தமிழ்நாடு காவல்துறையினரின் நடவடிக்கைக்கு தலைகுனிவை எடுத்துள்ளது. எதிர்க்கட்சியினரை வேட்டையாடும் காவல்துறையினருக்கு இது ஒரு எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது.