டில்லி,
2017 ஜனவரி 1 முதல் அனைத்துவிதமான வங்கி பரிவர்த்தனைக்கும் ஆதார் எண் கட்டாயம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.
கடந்த 8ந்தேதி முதல் பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து நாட்டில் பணப்புழக்கம் தடை பட்டுள்ளது. சாமானிய மக்கள் அன்றாட தேவைக்கு பணமில்லாமல் அவதியுற்று வருகின்றனர்.
aathar
நடுத்தர மற்றும் உயர் வகுப்பு மக்கள் மட்டும் தங்களிடம் உள்ள கார்டுகளை வைத்து, தேவையான பொருட்களை வாங்கி நாட்களை தள்ளி வருகிறார்கள்.
இந்நிலையில் அடுத்த மாதம் 1ந்தேதி முதல் அனைத்து விதமான வங்கி பரிவர்த்தனைக்கும் ஆதார் எண் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
 
இதுகுறித்து, வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் வங்கி பண பரிவர்த்தனை செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். ஆன்லைன் பரிவர்த்தனையிலும் ஆதார் எண்ணை பயன்படுத்த வேண்டும். ஆதார் அடையாளங்களை உறுதி செய்யும் கருவிகளை வங்கிகளில் பொருத்த வேண்டும். வங்கிகள் – வாடிக்கையாளர்கள் இடையிலான கே.ஒய்.சி திட்டத்திற்கு மாற்றாக ஆதார் எண்ணை பயன்படுத்த வேண்டும்.
rbi1
வாடிக்கையாளர்களின் பல்வேறு அட்டை பயன்பாடுகளுக்கு பதிலாக புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ந் தேதிக்குள் ஆதார் எண்ணை முழுமை யாக வங்கி கணக்குகளுடன் இணைக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் குறிப்படப்பட்டுள்ளது.
இதே போன்று, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி முதல், ரயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்கள் சலுகைகள் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.