சென்னை:
தமிழக முதல்வர் விரைவில் நலம் பெற வேண்டி 100 ஆலிம்கள் அப்பல்லோ மருத்துவமனை முன்பு சிறப்பு பிரார்த்ரனை செய்தனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 10தினங்களுக்கு மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
முதல்வர் குறித்து நாளுக்கு நாள் பல்வேறு வதந்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதனால் அதிமுக தொண்டர்கள் முதல் அமைச்சர்கள் வரை அவரவருக்கு பிடித்த முறையில் இறைவனை வேண்டி வருகின்றனர்.
முதல்வர் விரைவில் பூரண குணமடைய பல்வேறு கோயில்களில் சிறப்பு வழ்பாடுகள் நடத்தி வருகின்றனர்.
இஸ்லாமிய சமுகத்தை சேர்ந்தவர்களும் முதல்வருக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், முதல்வர் உடல்நலம் பெற வேண்டி, இஸ்லாமிய மத குருக்களான ஆலிம்கள் சுமார் 100 பேர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் அப்பல்லோ மருத்துவமனை வாசலில் திரண்டனர். அங்கு, முதல்வரின் உடல்நலம் குணம் அடைய சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
ஆலிம்கள் என்பவர்கள், இஸ்லாமிய மார்க்கம் குறித்து உயர் படிப்பு படித்தவர்கள். இவர்கள் மசூதிகளில் உலமாக்களாகவும் பணிபுரிவர். ஷரியத் சட்டம் குறித்து முழுமையான திறனறிவு பெற்றவர்களே ஆலிம்கள் எனப்படுவர்.