
’காஞ்சனா 3’ படத்தின் நடிகையும், ரஷ்யாவைச் சேர்ந்த மாடலுமான அலெக்ஸாண்ட்ரா ஜாவி மறைந்துள்ளார்.
கோவாவில் உள்ள வாடகை குடியிருப்பில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். 24 வயதான அலெக்ஸாண்ட்ரா தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஷ்ய நடிகை அலெக்ஸாண்ட்ராவின் ஆண் நண்பர் அவரை விட்டு பிரிந்து சென்றதாகவும், இதன் காரணமாக அவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
அலெக்ஸாண்ட்ராவின் குடும்பத்தாரின் ஒப்புதலுடன், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப் படுவதாக ரஷ்ய துணைத் தூதரகம் தெரிவித்தது.
கடந்த 2019-ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த புகைப்படக்காரர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு புகார் தெரிவித்தார் அலெக்ஸாண்ட்ரா. இதையடுத்து அந்த புகைப்படக் காரர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]