வருமான வரியை தாக்கல் செய்ய நாளை முதல் புதிய இணையதளம்

Must read

புதுடெல்லி:
ருமான வரி தாக்கலை எளிதாக்க, மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளம் தயாராகி வருகிறது. புதிய இணையதளம் வரும் ஜூன் மாதம் 7ம் தேதி செயல்பாட்டுக்கு வரும் நிலையில், நாளை (ஜூன்1) முதல் ஜூன் 6ம் தேதி வரை பழைய இணைய தளம் இயங்காது என வருமான வரித் துறை அறிவித்துள்ளது.

வருமான வரித் துறையில் மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தற்போது www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளம் பயன்பாட்டில் உள்ளது.

மத்திய நேரடி வரி வாரியத்தின் வெளியீட்டின்படி, புதிய இனையதளமான www.incometax.gov.in ஜூன் 7 ஆம் தேதி தொடங்கப்படும். வரி செலுத்துவோருக்கு இனி வருமான வரி தாக்கல் செய்வது எளிதாக இருக்கும்.

More articles

Latest article