புதுடெல்லி:
போதையில் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிப்பபது சம்பந்தமாக சட்டம் இயற்றப்பபடும் என மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து மந்திரி நிதின்கட்காரி கூறினார்.
நிதின் கட்கரி ஒரு வார பயணமாக அமெரிக்கா சென்று அங்குள்ள போக்குவரத்து விதிமுறைகள் பற்றி நேலில் ◌அறிந்து வந்தார். அமெரிக்கா போல இந்தியாவிலும் போக்குவரத்து விதிகளை மீறு வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்காக கடுமையான விதிமுறைகளுடன் கூடிய புதிய மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த மசோதாவில் மது அருந்தி விட்டு போதையில் வாகனம் ஓட்டு வோருக்கு தண்டனை மற்றும் அபராதம் படிப்படியாக கடுமையாக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக பிடிபடுவோருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை, 2-வது முறையாக பிடிபடுபவர்களுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறை தண்டனை, 3-வது முறையாக பிடிபடுவோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதில் அபராதம், சிறை தண்டனை ஆகிய இரண்டும் சேர்த்து விதிக்கப்படவும் இடம் உள்ளது. மற்ற விதி மீறல்களுக்கான தண்டனை விவரம் வருமாறு:-
* அதிவேகமாக வாகனம் ஓட்டுவோருக்கு முதல் முறையாக ரூ.400, 2-வது முறையாக ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
* ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவோருக்கு பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டு வோருக்கும் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும்.
* செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவோருக்கு முதல் முறை ரூ.100, 2-வது முறை ரூ.300 அபராதம் விதிக்கப்பட உள்ளது.
* லைசென்ஸ் இல்லாமல் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். வாகனம் உரிமம் ரத்து செய்யப்படும்.
இந்த மசே◌ாதா பற்றி அனைத்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு புதிய விதிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படுகிறது.