மும்பை:
கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு  உத்தரவு அமலில் உள்ள நிலையிலும்,   மஹாராஷ்டிரவில் மதுபான விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 4200 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில்தான் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன.

இதில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. இன்று ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த மாநிலத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4200-ஐ தாண்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்தனர். இதுவரை 223 பேர் பலியாகியுள்ளனர். 507 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

 மஹாராஷ்டிரவில் மதுபான விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய சுகாதார துறை அமைச்சர் ராஜேஷ் டோப், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையிலும், மஹாராஷ்டிரவில் மதுபான கடைகள் திறந்தே இருக்கும். சமூக இடைவெளியை கடைபிடித்து, பொது மக்கள் மதுபானங்களை வாங்கி செல்லலாம் என்று தெரிவித்துள்ளார்.

வீடியோ கான்பிரன்சிங் மூலம் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த தகவலை தெரிவித்தார். இந்நிலையில், மதுபான கடைகள் எவ்வ்ளவு நேரம் திறந்திருக்கும் என்ற தகவலை அவர் தெரிவிக்கவில்லை.

ஏற்கனவே சில மாநிலங்களில், அதாவது அசாம், மேகாலயா ஆகிய மாவட்டங்களில், மதுபான கடைகள் மற்றும் மொத்த விலை கடைகளை குறிப்பிட்ட மணி நேரங்கள் திறக்க கடந்த வாரம் வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக மக்கள் தொகை நெருக்கடியாக உள்ள மும்பை நகரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எணிக்கை அதிகரித்து வருவால் சமூக தொற்றாக மாறிவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.