வேலுார்:
போதையில் போலீசார் கன்னத்தில் அறைந்து, கலாட்டா செய்த பெங்களூரு ஐடி இளம்பெண் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
வேலுார் துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவேகானந்தன், 24; அவரது காதலி மல்லேஸ்வரத்தைச் சேர்ந்த அர்ச்சனா, 23. இருவருக்கும் வரும் செப்டம்பர் மாதம் திருமணம் நடக்க இருக்கிறது.
இருவரும் நேற்று முன்தினம் வேலூர் வந்திருக்கிறார்கள். அங்குள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அதீதமாக மது அருந்தியுள்ளனர். அதீத மது போதையில் இருசக்கர வாகனத்தை தாறுமாறாக ஓட்டியபடி வந்தது இந்த ஜோடி. இவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை உதவி ஆய்வாளரை, அர்ச்சனா அடித்துள்ளார். இதையடுத்து இருவரையும் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர் காவலர்கள். . தங்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கூடாது என, காதல் ஜோடி, காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டது. இருவரையும் எச்சரித்து போலீஸ் அனுப்பிவிட்டதாக நேற்று தகவல் வெளியானது.
ஆனால் அர்ச்சனாவை காவல்துறை கைது செய்துள்ளது. இது குறித்து காவல்துறை வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:
இருவரும் போதையில் இருப்பதை உறுதி செய்ய, மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. விவேகானந்தன் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டியதற்காக, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் ஓட்டி வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விவேகானந்தன் தந்தை
அபராதம் கட்டியதால், அவரை எச்சரித்து, பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தாக்கியதற்காக, அர்ச்சனாவை கைது செய்து, வேலுார் மத்திய பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொதுவாகவே குடிப்பழக்கம் அதிகரித்து வருகிறது. அதிலும் ஐ.டி. துறையில் பணியாற்றும் பெண்கள் குடிப்பதும், ரகளையில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் சென்னையில் ஐஸ்வர்யா என்ற ஐ.டி. பெண்மணி, மது போதையில் காரோட்டி ஒருவரை கொன்ற சம்பவம் குறிப்பிடத்தக்கது.